தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன்.
வேட்டி, சட்டை, விபூதி, நெற்றியில் தீற்றலாகக் குங்குமம், புன்னகைபூத்த முகம்… தொகுதி முழுக்கச் சுற்றி வந்ததில் கிடைத்த வரவேற்பில் மலர்ந்து சிரித்துப் பேசுகிறார்.
சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா சாலை அருகே அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு இன்று 2.04.2021 காலை 8 மணி அளவில் வருகை தந்த அ.தி.மு.க.வின், தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன் அவர்கள், அங்கு உடற்பயிற்சில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் வரும் தி.நகர் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமக்கு இரட்டை இலை சின்னதில் வாக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கூடுதல் தகவல்:
தி.நகர் தொகுதில் கடந்த 2016-ஆம் தேர்தலில் 57.59% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், அ.தி.மு.க வேட்பாளர் சத்திய நாராயணன், திமுக வேட்பாளர் என்.வி.என்.கனிமொழி அவர்களை 3155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்த முறையும் வெற்றி பெற மிக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா.