சிவ நிந்தனைபுரிந்த கருங்குழி சுவாமியார் ரகோத்தமன் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!

இந்து தமிழர் கட்சி கோரிக்கை

காஞ்சிபுரம்
மாவட்டம் கருங்குழி என்ற ஊரில்
சுவாமி ரகோத்தமா என்ற ஒரு சாமியார் கோயில் கட்டி ஆசிரமம் அமைத்து இருப்பதாகவும், மாதத்திற்கு
ஒருநாள் தான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்றும் அன்பர்கள் மூலமாக அறிய வந்தோம்.

விஷயம் என்னவென்றால் இந்த சாமியார் சிவலிங்கத்தின் மீது நின்று கொண்டும் சிவலிங்கத்தின் மீது படுத்துக் கொண்டும் என்னால் தான் மழை பொழியச் செய்ய முடியும் என்றும் சொல்லக்கூடிய ஆன்மிக சேட்டைகளை எம்மால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

பொன்னார் மேனியனே சிவபெருமானை போற்றித் துதிக்க வேண்டிய கடமையுள்ள வணங்கவேண்டிய இந்து சாமியார் ஒருவர் நானே சிவன் என்று திரு ஆவுடை மீது ஏறி நின்று செய்யக்கூடிய இந்த ஆன்மீக அழிச்சாட்டியத்தை சிவ பக்தர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“அகம்பிரம்மாஸ்மி” என்கின்ற தத்துவம்,

எல்லாம் நானே கடவுள் என்ற வாழ்வியல் நெறி எல்லாம் இந்து மதம் கற்றுக்கொடுத்து இருந்தாலும் கூட,

இது போன்று
சுவாமி திருமேனியின் மீது செய்யக்கூடிய இந்த ஆன்மீக சேட்டைகளை தடுத்தாக
வேண்டும் நிறுத்தியாக வேண்டும்.

இதையே
பிற மதத்தவர் செய்து இருந்தால் சிவனடியார்கள் , விழித்தெழுந்து கொதித்தெழுந்து, அரசின் கவனத்திற்கு சென்று சேரும்
வரை செய்திருப்போம்.
தானே!.

“நானே கடவுள் வடிவம்” என்று சாமியார்கள் சொல்லிக் கொள்ளட்டும்.

அதைப் பற்றி கவலை இல்லை.

பிரச்சனை எங்கு வருகிறது என்று சொன்னால் கடவுளின் வடிவம் என்று தன்னை கற்பனை செய்து கொள்ளக்கூடிய இது போன்ற சாமியார்கள் கடவுளை அவமதிக்கும் பொழுதுதான் இந்த சாமியார்கள் மீதான வெறுப்பு, இந்து சமூகத்திற்கு ஏற்படுகிறது .

ஆகவே இந்த கருங்குழி சுவாமி ரகோத்தமா – (கருங்குழி ராஜா இதுதான் சாமியாராக முன்பு இவருடைய பெயர்)
செய்தது வன்மையான சிவ நிந்தனை .
இதற்கு எங்களுடைய இந்து தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுவாமி நித்யானந்தர் போன்ற நபர்கள் கூட சிவன் போல வேடம் தான் பூண்டார்கள்; ஆனால் இதுபோன்று சிவலிங்கத்தின் மீது ஏறி நின்று அவமதிக்கவில்லை.

சிவ நிந்தனை
புரிந்த சுவாமி ரகோத்தமன் கண்டிக்கப்பட
வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும் .

தமிழக அரசு இவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுகிறோம் .

இது போன்ற நபர்களை ஊக்குவிக்காமல் சிவனடியார்கள் பக்தர்கள் மனதுக்குள் உள்ளக்குமுறலை வைத்துக்கொள்ளாமல் கண்டனத்தை வெளிக் காட்ட பதிவு செய்ய வேண்டுகிறோம்.

இதை சகித்துக் கொண்டு இந்து சிவனடியார்கள் பக்தர்கள் அனுமதிப்போ மேயானால்
இது போன்ற ஆன்மீக சேட்டைகள் செய்யக்கூடிய சாமியார்கள்
நாளை பார்வதி தேவிக்கு முத்தம் கொடுத்தாலும் யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சொல்வார்கள்.

இந்த ஆன்மீக ஆணவம்
பிடித்த ஆன்மீக அயோக்கியத்தனங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது.

இதுபோன்ற
“சிவ நிந்தனை ” புரியும் சாமியார்கள் தங்களுடைய சேட்டைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இராம. இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி நிறுவனதலைவர்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*