புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபடுவோம் என்று விவசாய அமைப்புகள் எச் சரிக்கை விடுத்துள்ளன.
டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் இன்று அரசுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டு ‘டில்லி சலோ’ என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், டில்லி – ஹரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களின் பிரதிநிதி களுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், முடிவு எட்டப்படாத தால் இன்று 3-ம் கட்ட பேச்சு வார்த் தைக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.