அஜித் ரசிகர்களை கவர பழனிசாமிக்கு பரிசாக அஜித் புகைப்படம்
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் ஆதரவை ஈர்க்கும் முயற்சியாக, அவரும் அஜித்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை கட்சி தொண்டர்கள் பரிசளித்து வருகின்றனர்.
சென்னையின் பெருங்குடி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பழனிசாமிக்கு அஜித் உடன் இருக்கும் புகைப்படம் வழங்கப்பட்டது. இதேபோன்று நாகர்கோவில் மற்றும் சிவகாசி பகுதிகளிலும், அஜித் மற்றும் பழனிசாமி இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன.
சிவகாசியில் நடந்த நிகழ்வில், பழனிசாமி, அஜித் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இடம்பெற்ற புகைப்படமும் வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் அஜித் குமார் மற்றும் விஜய் இடையே நீண்டநாள் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் ஈடுபட்டு வருவதால், அஜித் ரசிகர்களின் ஓட்டுகளைப் பெறும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
15 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்