சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்தியா அசத்தல்; 5 தங்கப் பதக்கங்களுடன் உலக முதலிடம்
56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (International Physics Olympiad) போட்டியில் இந்திய மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்து, ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று உலக அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல், கணிதம் மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் ஒலிம்பியாட் போட்டிகளில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் வானியல் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் தேசிய அளவிலான தேர்வுகளை மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு தேசிய அளவிலான இயற்பியல் ஒலிம்பியாட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐந்து மாணவர்கள், கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர். இதில் 87 நாடுகளைச் சேர்ந்த 381 திறமையான மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்திய அணியைச் சேர்ந்த கனிஷ்க் ஜெயின், ஷ்ரேஷ்த் சுராயா, ரித்தேஷ் ஆனந்த் பென்டாலே, ரிஷித் கார்க் மற்றும் ஸ்வரித் ஜோஷி ஆகிய ஐந்து பேரும் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் புள்ளிப் பட்டியலில் இந்தியா உலக முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, இந்திய இளைஞர்களின் திறமை, அறிவியல் ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்றும், கடந்த பத்து ஆண்டுகளாக ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பெருமைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்