முதல்வர் விஜய் ஸ்டாலின், வைகோவை நேரில் சந்திப்பு – அரசியல் மரியாதை சந்திப்பு கவனம் ஈர்ப்பு
சென்னை: தமிழக அரசியலில் முக்கிய கவனம் ஈர்க்கும் வகையில், முதல்வராக பதவியேற்ற விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை இன்று (மே 11) நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் உள்ளிட்ட புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை நகரில் ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் சென்று அவரை சந்தித்தார்.
விஜய் வருகையின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். வீட்டுக்குள் வந்த விஜயை ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்று, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பதிலுக்கு விஜய்யும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து உரையாடினர்.
இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விஜய்யை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு விஜய் சென்று அவரையும் சந்தித்தார். வைகோவின் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். வைகோவும் விஜய்யும் சிரித்தபடி உரையாடிய பின்னர், விஜய்யை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்