உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு

சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக தொழில் துறையினரும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களும் சேதமடைந்து வருகின்றன. மாநிலத்தில் தற்போது மின் தேவை 20,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ள நிலையில், சென்னை, கோவை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் திடீர் மின்தடை தொடர்ந்து பதிவாகி வருகிறது. தொழில் துறையினரின் கூற்றுப்படி, குறைந்த மின்னழுத்தம் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முழுவேகத்தில் இயங்கும் இயந்திரங்கள் திடீரென நிறுத்தப்படுவதால், அவை பழுதடைந்து தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பொதுமக்களும் இதேபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்விசிறி, ஏசி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட சாதனங்கள் சரியாக இயங்காததுடன், டிவி, பிரிட்ஜ், மிக்சி, இன்வெர்ட்டர் போன்ற வீட்டு உபகரணங்களும் சேதமடைவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையின் நெற்குன்றம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் மற்றும் பழைய மின் உள்கட்டமைப்பு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், அதிக மின் தேவை உள்ள பகுதிகளில் போதுமான அளவில் மின்மாற்றிகள் இல்லாததே குறைந்த மின்னழுத்தத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்தனர். துணை மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக அமைப்புகளை முறையாக பராமரிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

‘தி.மு.க.,வினர் பெயில் வாங்குவது போல த.வெ.க.,வினரையும் வாங்க வைக்க வேண்டும்’ - உதயநிதி பேச்சு
‘தி.மு.க.,வினர் பெயில் வாங்குவது போல த.வெ.க.,வினரையும் வாங்க வைக்க வேண்டும்’ - உதயநிதி பேச்சு
8 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ என்னிடம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ என்னிடம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
9 மணி நேரங்கள் முன்பு
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
2 நாட்கள் முன்பு
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்