உடனடி செய்தி

அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது

அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த இரண்டு மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதுடைய எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவியரான இருவர், விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விடுதியின் துப்புரவுப் பணியாளரான 40 வயது பெண் ஒருவர், மாணவியரை இரவு நேரங்களில் விடுதிக்கு வெளியே அழைத்துச் சென்று, வெளிநபருடன் தொடர்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து, மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவியருக்கு மது வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
8 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
8 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு
‘தி.மு.க.,வினர் பெயில் வாங்குவது போல த.வெ.க.,வினரையும் வாங்க வைக்க வேண்டும்’ - உதயநிதி பேச்சு
‘தி.மு.க.,வினர் பெயில் வாங்குவது போல த.வெ.க.,வினரையும் வாங்க வைக்க வேண்டும்’ - உதயநிதி பேச்சு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்