உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்

கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மொத்த கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தவெக எம்.எல்.ஏ. சரவணன் மற்றும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. ஆய்வின்போது கிடங்கில் இருந்த அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, லாரியின் முன் மற்றும் பின்புற பதிவு எண்கள் அழிக்கப்பட்டிருந்ததை கவனித்த அவர், ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டார். ஆனால், இதுகுறித்து தனக்கு தகவல் இல்லை என ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாகனத்தின் டயர்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததையும், தகுதிச்சான்று, காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததையும் தொடர்ந்து, லாரி ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தின் மேலாளரை சரவணன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார். அப்போது, எதிர்முனையில் பேசிய மேலாளர், "இந்த விவகாரத்தை கேட்க நீங்கள் யார்? ஒப்பந்தம் குறித்து பேச வேண்டாம். தேவையான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று பதிலளித்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இதற்கு பதிலளித்த சரவணன், "நான் நேரலையில் இருக்கிறேன். லாரி தொடர்பான விவரங்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுப்பியுள்ளேன்" என்று கூறியதாகவும், பின்னர் மேலாளர் அழைப்பை துண்டித்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், சரவணன் அறக்கட்டளை சார்பில் இயக்கப்படும் அமரர் ஊர்தியின் பதிவு எண் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. அந்த வாகனத்தில் குறிப்பிடப்பட்ட பதிவு எண் வேறு ஒரு இருசக்கர வாகனத்துக்குரியது என சிலர் குற்றம்சாட்டி பதிவுகளை பகிர்ந்துள்ளனர். மறுபுறம், அந்த வாகனம் பழைய வாகனத்தை சீரமைத்து சமூக சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பதிவு எண் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது விசாரணை முடிவு இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்