உடனடி செய்தி

மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி

மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி
கோவில்களில் மொபைல் போனுக்கு தடை விதித்து, அதை பாதுகாப்பாக வைக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பது பக்தர்களுக்கு தண்டனை வழங்குவது போன்றது என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். கோவில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் காக்க ஆபாசமான 'ரீல்ஸ்' மற்றும் அனுமதியற்ற புகைப்படம், வீடியோ எடுப்பதை தடுப்பது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், மொபைல் போனை முழுமையாக தடை செய்வதும், பாதுகாப்புக்கு கட்டணம் வசூலிப்பதும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மொபைல் போன் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமல்லாமல், அவசர உதவி பெறவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் அவசியமான சாதனமாக மாறியுள்ளது. குறிப்பாக பெரிய கோவில் வளாகங்களில் அவசர அறிவிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான மாற்று வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சபரிமலை மற்றும் திருப்பதி போன்ற முக்கிய கோவில்களில் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கட்டணம் வசூலிப்பதில்லை என்றும், அவசர தகவல்களை பகிர்வதற்கான வசதிகள் உள்ளதாகவும் ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதை அரசு கைவிட வேண்டும். மொபைல் போனுக்கு தடை தொடர வேண்டியிருந்தால், அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இலவச வசதி ஏற்படுத்த வேண்டும் என காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
2 மணி நேரங்கள் முன்பு
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
2 மணி நேரங்கள் முன்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
2 நாட்கள் முன்பு
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்