உடனடி செய்தி

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல டைம்ஸ் சதுக்கம் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு கத்திகளுடன் வந்த பெண், இருவரை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் சதுக்கத்தின் 42வது வீதி மற்றும் 7வது அவென்யூ பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. கத்திக்குத்தில் காயமடைந்த பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு ஆண் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நியூயார்க் போலீசார், கத்தியை கீழே போடுமாறு அந்தப் பெண்ணை பலமுறை எச்சரித்தனர். ஆனால் அவர் கத்திகளை கீழே போடாமல் போலீசாரை நோக்கி முன்னேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணை நடைபெறும் நிலையில் பொதுமக்கள் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
3 மணி நேரங்கள் முன்பு
இமயமலை பேரிடர்களுக்கு கூட்டு தீர்வு அவசியம்: அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை சத்குரு வலியுறுத்தல்
இமயமலை பேரிடர்களுக்கு கூட்டு தீர்வு அவசியம்: அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை சத்குரு வலியுறுத்தல்
3 மணி நேரங்கள் முன்பு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
1 நாட்கள் முன்பு
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்