உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அதிகரிக்கும் வகையில், 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, ரூ.3,070 கோடி மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை, உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியக் கடலோரக் காவல்படைக்கு தேவையான 16 பொருட்களும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான 389 பொருட்களும் இடம்பெற்றுள்ளன. தேஜஸ் இலகுரக போர் விமானம், சுகோய் Su-30MKI போர் விமானம், ஹெலிகாப்டர்கள், T-72 மற்றும் T-90 டாங்கிகள், போர்க்கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் ரேடார் உபகரணங்களுக்கான முக்கிய பாகங்கள் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சி அடைவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும், வெளிநாட்டு இறக்குமதிக்கான செலவைக் குறைத்து, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்