செய்திகள்
⚡ உடனடி செய்தி
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் வஞ்சிபாளையம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்துக்குப் பிறகு சிலைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்படுவதாக ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சிவரூப விநாயகர், தர்பார் விநாயகர், அன்ன வாகனம் விநாயகர், ஆதியோகி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 3 முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாராகி வருகின்றன.
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யவும், 20 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், சுமார் 600 இடங்களில் விசர்ஜன ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரில் 1,008 சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும் 5,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் செப்டம்பர் 14 முதல் ஒரு வார காலம் நடைபெற உள்ளதாகவும், 'தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து மதமும் ஒன்று' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்