த.வெ.க. அரசின் கணக்கு: 116-ல் 107; பெரும்பான்மைக்கு நெருக்கம்
தமிழகத்தில் ஆளும் கட்சியான த.வெ.க., தனிப்பெரும்பான்மையை நோக்கி அரசியல் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகிறது.
தற்போது த.வெ.க.க்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வழக்கமாக சட்டசபையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில், நான்கு தொகுதிகள் காலியாக இருப்பதால் தற்போதைய கணக்கில் 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமானது.
இதன்படி, த.வெ.க.க்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால், தனிப்பெரும்பான்மையை எட்ட முடியும்.
அரசியல் வட்டார தகவலின்படி, வெளியிலிருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால், த.வெ.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இடைத்தேர்தல் மற்றும் கூட்டணி அரசியல் கணக்குகளை முன்னிட்டு, த.வெ.க. தலைமை அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
12 மணி நேரங்கள் முன்பு
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
21 மணி நேரங்கள் முன்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
3 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்