த.வெ.க.,வுக்கு திருமாவளவன் அறிவுரை | அதிமுக எம்.எல்.ஏ., தாவல் விவகாரம்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க., தலைவர் திருமாவளவன், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் நிலையான ஆட்சி தொடரவும், ஜனாதிபதி ஆட்சி ஏற்படாமல் தடுக்கவும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததாக அவர் கூறினார்.
அமைச்சரவையில் இணைந்தது த.வெ.க.,வின் அழைப்பை ஏற்றே என தெரிவித்த அவர், எந்த சூழ்நிலையிலும் த.வெ.க., அரசு கவிழ அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.,வில் சேர்வது அரசியலுக்கு நல்ல முன்னுதாரணம் அல்ல என்றும், அத்தகையவர்களை த.வெ.க., ஊக்குவிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இது த.வெ.க.,வின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்பதால், கட்சி இனி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என திருமாவளவன் அறிவுரை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பில் தென் மாநிலங்கள் இணைப்பு; 'ஆப்பரேஷன் துபான்' திட்டம் விரிவாக்கம்
7 மணி நேரங்கள் முன்பு
'போதையில்லா தமிழகம்' மாநாடு இன்று பொள்ளாச்சியில்; 'வீ த லீடர்ஸ்' சார்பில் அண்ணாமலை பங்கேற்பு
7 மணி நேரங்கள் முன்பு
பின்னணிப் பாடல் உலகின் ஜாம்பவான் எஸ். ஜானகி காலமானார்; இசை ரசிகர்கள் சோகத்தில்
7 மணி நேரங்கள் முன்பு
பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்