திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: வைகோ முக்கிய அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக கூட்டணி விலகலை அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பாஜக ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக தெரிவித்தார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு எதிரானவை என குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு அந்த நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்தார். எதிர்கால இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும், நல்ல நடவடிக்கைகளை பாராட்டி, தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டதாகவும், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்தார். மேலும், தாம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ரூ.50 கோடி பெற்றதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும், அதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்