உடனடி செய்தி

உலக அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா? ஆய்வில் வெளியான தகவல்

உலக அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா? ஆய்வில் வெளியான தகவல்
சர்வதேச அளவில் இந்தியாவைப் பற்றிய மக்களின் கருத்துகளை அறிய அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு நிறுவனம் 36 நாடுகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டது. 42,000க்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இந்தியா குறித்து 45 சதவீதம் பேர் நேர்மறையான கருத்துகளையும், 41 சதவீதம் பேர் எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிகபட்சமாக 79 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல், பிரிட்டன் மற்றும் கென்யாவில் தலா 71 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 63 சதவீதம் பேரும், இத்தாலியில் 56 சதவீதம் பேரும் இந்தியாவைப் பற்றிய நேர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர். மறுபுறம், வங்கதேசத்தில் 42 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் 51 சதவீதம் பேர் எதிர்மறையான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியிருப்பது, வங்கதேசத்தில் உருவான எதிர்மறை மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை அதிகமாக காணப்பட்ட நிலையில், அந்நாட்டில் 91 சதவீதம் பேர் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
6 மணி நேரங்கள் முன்பு
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
6 மணி நேரங்கள் முன்பு
சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் வீரேந்தர பசோயா கைது
சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் வீரேந்தர பசோயா கைது
6 மணி நேரங்கள் முன்பு
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்