செய்திகள்
⚡ உடனடி செய்தி
அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ என்னிடம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையில் நடைபெற்ற 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக அரசின் சில அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ தன்னிடம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், அரசை விமர்சிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் செயல்படுவது உண்மைதான் என்றாலும், சில இடங்களில் மீண்டும் ஊழல் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, சில அமைச்சர்கள் கமிஷன் கேட்கும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை முதலில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் அதிகாரிகளும் அமைச்சர்களும் கட்டுப்பாடின்றி செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் இருந்து தனக்கு முக்கிய பொறுப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வந்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்ததாகவும் அண்ணாமலை கூறினார். இதுகுறித்து அமித் ஷாவிடமே நேரடியாகக் கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசை விமர்சித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு வருத்தமளிப்பதாகக் கூறினார். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மையை நம்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டில் செலவுகளைக் குறைப்பதற்குப் பதிலாக, அந்த நிதியை கிராமப்புற மேம்பாடு, அரசு பள்ளிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இத்தகைய அரசியல் இளைஞர்களை கவராது என்றார்.
பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், நடிகர் ரஜினிகாந்தின் 'மன்னன்' திரைப்படக் காட்சியை நினைவுபடுத்தி, ''எனக்கு கிடைத்த தங்கச் செயினும் மோதிரமும் நீங்கள் தான்'' என்று தொண்டர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
8 மணி நேரங்கள் முன்பு
‘தி.மு.க.,வினர் பெயில் வாங்குவது போல த.வெ.க.,வினரையும் வாங்க வைக்க வேண்டும்’ - உதயநிதி பேச்சு
8 மணி நேரங்கள் முன்பு
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
2 நாட்கள் முன்பு
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்