பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 30) வெளியிட்டது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சேலம் (மேற்கு), தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகியவை அடங்கும்.
மேலும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில் முக்கியமாக தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
📌 வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்:
பெரம்பூர் – திலகபாமா
தர்மபுரி – சவுமியா அன்புமணி
விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்
சேலம் (மேற்கு) – மு. கார்த்தி
பென்னாகரம் – செல்வம்
போளூர் – பாஸ்கரன்
திருப்போரூர் – கே. பாலு
ஜெயங்கொண்டம் – வைத்தி
சேலம் (வடக்கு) – சதாசிவம்
விக்கிரவாண்டி – சிவக்குமார்
சோளிங்கர் – சரவணன்
மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ. பழனிச்சாமி
உத்திரமேரூர் – மகேஷ் குமார்
ரிஷிவந்தியம் – செழியன்
காட்டுமன்னார்கோவில் – அன்பு சோழன்
இதற்கு முன்பு மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில்:
கீழ்வேளூர் – ச. வடிவேல் ராவணன்
அம்பத்தூர் – என். சேகர்
செஞ்சி – அ. கணேஷ் குமார்
ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்