உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து ரூ.33.92 கோடி: ரூ.1 கோடி டிபென்டர் கார் உட்பட விவரங்கள் வெளியீடு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து ரூ.33.92 கோடி: ரூ.1 கோடி டிபென்டர் கார் உட்பட விவரங்கள் வெளியீடு
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவுடன் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33.92 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் ரூ.50,000 ரொக்கம் இருப்பதாகவும், மனைவி கிருத்திகாவிடம் ரூ.75,000 ரொக்கம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகள் தன்மயாவின் வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு ரூ.2.56 லட்சம் உள்ளது. வாகனங்களில், ரூ.1 கோடி மதிப்பிலான ‘டிபென்டர்’ கார் மற்றும் ரூ.23 லட்சம் மதிப்புள்ள ‘இன்னோவா’ கார் உள்ளன. நகைகள் அவரது பெயரில் இல்லாத நிலையில், மனைவியிடம் சுமார் 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்துக்கள் விவரப்படி, உதயநிதியிடம் ரூ.12.92 கோடி, மனைவி கிருத்திகாவிடம் ரூ.13.25 கோடி மற்றும் மகளிடம் ரூ.2.56 லட்சம் உள்ளது. இதன் மொத்தம் ரூ.26.20 கோடியாகும். மேலும், அவரது பெயரில் ரூ.7.72 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன. இதனால், உதயநிதி ஸ்டாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33.92 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், அவரின் பெயரில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக, அவர் லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றுள்ளார். மகன் பெயர் சேர்க்கப்படவில்லை இந்த முறை தாக்கல் செய்யப்பட்ட சொத்து விபரங்களில் அவரது மகன் இன்பன் பெயர் இடம்பெறவில்லை. தற்போது அவர் ‘ரெட் ஜெயிண்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதால், பெயர் சேர்க்கப்படாமல் விடப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான மாற்றம் கவனம் ஈர்ப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.7.94 கோடியாக இருந்த உதயநிதியின் வருமானம், 2024-25ஆம் ஆண்டில் ரூ.10.40 லட்சமாக குறைந்துள்ளது. மாறாக, அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 2023-24ல் ரூ.44.94 லட்சத்திலிருந்து 2024-25ல் ரூ.2.92 கோடியாக அதிகரித்துள்ளது. 2021-இன் ஒப்பீடு 2021 தேர்தலில் உதயநிதியின் சொத்து ரூ.29.07 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.33.92 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அவரின் அசையும் சொத்துக்கள் குறைந்தும், மனைவியின் சொத்துக்கள் அதிகரித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு நிதி சட்ட திருத்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
அஜித் ரசிகர்களை கவர பழனிசாமிக்கு பரிசாக அஜித் புகைப்படம்
அஜித் ரசிகர்களை கவர பழனிசாமிக்கு பரிசாக அஜித் புகைப்படம்
17 மணி நேரங்கள் முன்பு
தேர்தல் காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு
தேர்தல் காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
23 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு: முன்னாள் முதல்வர் மகன் அமித் ஜோகி கொலை வழக்கில் குற்றவாளி
23 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு: முன்னாள் முதல்வர் மகன் அமித் ஜோகி கொலை வழக்கில் குற்றவாளி
18 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்