உடனடி செய்தி

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ, மொராக்கோ, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா அணிகள் அசத்தல் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ, மொராக்கோ, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா அணிகள் அசத்தல் வெற்றி
அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் பல அணிகள் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்தன. போஸ்னியா 3-1 கத்தார்: 'பி' பிரிவு லீக் போட்டியில் கத்தாரை எதிர்கொண்ட போஸ்னியா-ஹெர்சிகோவினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கெரிம் அலாஜ்பெகோவிச் தொடக்க கோலை அடித்த நிலையில், கத்தார் கோல்கீப்பரின் தவறால் ஓன் கோலும் கிடைத்தது. ஹசன் அல் ஹைதோஸ் கத்தாருக்காக ஒரு கோல் அடித்தாலும், இறுதியில் எர்வின் மஹ்மக் கோல் மூலம் போஸ்னியா வெற்றியை உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து 2-1 கனடா: முதல் பாதியில் கோல்கள் எதுவும் இல்லாத நிலையில், இரண்டாம் பாதியில் ருபன் வர்கேஸ் மற்றும் ஜோஹான் மன்சாம்பி கோல் அடித்து சுவிட்சர்லாந்தை முன்னிலை பெறச் செய்தனர். கனடா தரப்பில் பிராமிஸ் டேவிட் ஒரு கோல் அடித்தாலும், சுவிட்சர்லாந்து வெற்றியை தக்கவைத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மொராக்கோ 4-2 ஹைதி: 'சி' பிரிவு போட்டியில் ஹைதி ஆரம்பத்தில் முன்னிலை பெற்றாலும், மொராக்கோ வீரர்கள் அஷ்ரப் ஹக்கிமி, இஸ்மாயில் சைபாரி, ரஹிமி மற்றும் கெசைம் யாசின் ஆகியோரின் கோல்களால் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. தென் ஆப்ரிக்கா 1-0 தென் கொரியா: 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் தபிலோ மசிகோ அடித்த ஒரே கோலின் உதவியுடன் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனையை படைத்தது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்