செய்திகள் •
10 Jul 2019
மன்சூர் அலிகானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் : இந்து தமிழர் கட்சி
நடிகர் மன்சூர் அலிகானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இந்து தமிழர் கட்சி சார்பில் புகார் மனு
முகிலனுக்கு ஆதரவாக நக்கீரன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர், துணை முதல்வர், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இச்செயல் தேச ஒற்றுமைக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஆகவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் பாபு, பூபாலன், ராஜேஷ் ஆகியோர் புகார் மனு அளித்தார்கள்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய

