Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 16 Mar 2019

ஜிஎஸ்டி வரிக்காக அருண்ஜெட்லிக்கு விருது வழங்கிய மன்மோகன் சிங்

சரக்கு மற்றும் சேவை வரியை  அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கியது பற்றி  சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

2017 ம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரியை) அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு தொழில்முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மட்டுமின்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், இது பொருளாதார வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்றார்.

டில்லியில் நேற்று நடந்த விழாவில், CHANGE MAKER OF YEAR AWARD என்ற விருது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் ஜிஎஸ்டி வரியை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டது. 

இந்த விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லிக்கு வழங்கினார். இப்போது இதற்கு ராகுல் என்ன சொல்ல போகிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை பலரும் விமர்சனம் செய்து, சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு பதிவிடுகிறார்கள்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்