Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 05 Aug 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கி குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சட்டப்பிரிவு 370ன்கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இதனால் ரத்தாகிறது. குடியரசுத் தலைவரும் உடனடியாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் அவசர நடவடிக்கைகளை பார்த்தால் மீண்டும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்