செய்திகள் •
11 Oct 2018
சென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.! அதிர்ச்சியூட்டிய நித்யானந்த் ஜெயராமன்
சென்னை: நீர்நிலை நில ஆக்கிரமிப்புகளால் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2015-ல் ஏற்பட்ட பேரு வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரே இரவில் பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்ற ஒரு பேரழிவை இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற ரீதியில் அரசு செயல்பட்டு வருகிறது.
500 ஏக்கர் நீர்நிலை நிலம் ஆக்கிரமிப்பு
எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதியான இடங்களை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிர்நிலை நில ஆக்கிரமிப்புகளால், கூடிய விரைவில் மீண்டும் பெரிய வெள்ளம் சென்னையில் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -
⬅ முந்தைய