இந்து விரோதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்: ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள்
இந்து மதத்தையும், இந்து மத கடவுளையும் கொச்சை படுத்தி பேசும் கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் திராவிடர் கழக்கத்தினர்கள் இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை கொச்சை படுத்தி பேசி வந்தனர். ஓரிரு வாரங்கள் முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை
திராவிடர் கழகத்தின் கி.வீரமணி பொள்ளாச்சியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தினுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணை ஒப்பிட்டு பேசினார். இதனால் இந்துக்கள் மத்தியில் இந்த வீடியோ ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அதுமட்டும் இல்லாமல் பல தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல தி.மு.க. தொண்டர்கள் கட்சியை விட்டு விலகினார்கள் மேலும் பல தொண்டர்கள் தி.மு.க ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார்கள்.
தி.மு.க. தலைவரான ஸ்டாலின் ஒரு இஸ்லாமிய திருமணத்தில் கலந்து கொண்டு இந்து திருமணத்தை அருவருக்கதக்க வகையில் கொச்சை படுத்தி பேசியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஆக இப்படி தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத கடவுள்களையும் அசிங்கமாக பேசி வந்த தி.மு.க கட்சிகளுக்கு மக்கள் அனைவரும் ஒன்று பட்டு தேர்தலில் தக்க ஓட்டின் மூலம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றனர்.