Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 06 Nov 2018

மோடியின் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை

சூரத் பாரதப் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் சூரத்நகரில் விற்பனை செய்யப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை தீபாவளியை விட மிகவும் புகழ் பெற்றதாகும். மிகவும் பிரபலாமன இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும். இந்த தாந்திரியாஸ் பூஜை தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது.   முக்கியமாக லட்சுமி, மற்றும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும். முதல் முறையாக இந்த வருடம்  குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. இது குறித்து சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்