Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 26 Feb 2019

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்கி அழித்தது

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு கண்டனம் எழுந்தது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல், திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்