செய்திகள் •
23 Oct 2018
128 கோடி பினாமி சொத்துக்களை இழக்கும் லாலு!!!
128 கோடி பினாமி சொத்துக்களை இழக்கும் லாலு!!!
தமிழக அரசியலில் ஒரு சில கட்சிகள் குடும்ப அரசியல் உள்ளதோ அதேபோல் பிகாரில் லாலு யாதவ் குடும்பம் என்றால் அது மிகையாகாது. ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழலில் தண்டனை பெற்று சிறையில் (சொகுசாக மருத்துவமனையில்) இருக்கிறார்.
ரயில் மந்திரியாக இருந்தபோது முறைகேடாக பினாமி மூலம் சேர்த்த சொத்துக்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு சுமார் 128 கோடி. மேலும் இந்த சொத்து மதிப்பில் 25% அபராதமாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்.
இவர் ரயில் மந்திரியாக இருந்தபோது தனது உதவியாளர்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்து பின்னர் சிறிது வாருங்கள் கழித்து தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஊழல் செய்கையால் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்று நிரூபணம் ஆனதால் நீதிமன்றம் இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதியளித்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்தில் எப்போது நடக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய