Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 02 Jul 2019

ம.குன்னத்தூர் கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாடு

இந்து மதம் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளை வாழ்க்கைத் தத்துவங்களை கொண்டுள்ளது. என்பதற்கு உதாரணம்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்
ம.குன்னத்தூர் என்கின்றகிராமத்தில் இன்று ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக குன்னத்தூர் குளத்தில் ஒப்பாரி வைத்து வழிபாடு செய்தது ஒரு ஆச்சரியமான உண்மைத் தத்துவத்தை இன்று எமக்கு உணர்த்தியது.

ம. குன்னத்தூர் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் கூழ் காய்ச்சி விரதமிருந்து ஊர்வலமாக வந்து மேளதாளத்துடன் கண்மாயில் இருக்கக்கூடிய எல்லை தெய்வத்தை அபிஷேகம் செய்து , மலர் மாலைகள் அணிவித்து, பூசைக்கு தயாராகினார்கள்.

https://youtu.be/GLxxzfGvRuY
ம.குன்னத்தூர் கிராம மக்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு

பின்னர் குளத்தின் உள்ளேஅமைக்கபட்ட துணி பந்தலில், கொண்டு வந்த பூஜை பொருட்கள், கூழ் பானைகளை இறக்கி வைத்து 2 ஆண் பெண் உருவங்கள் மாவினால் தரையில் உருவாக்கப்பட்டிருந்தது .

அதை அலங்கரித்து மலர் மாலைகள் போட்டு பக்தி சிரத்தையோடு பூசாரி வழிபாடு செய்தார்.

பின்னர் தாய்மார்கள் வயதான பெரிய பாட்டிகள் கற்பூரம் காண்பித்த பிறகு மாவினால் செய்யப்பட்ட தெய்வத்திற்கு, கூட்டமாக வட்ட வடிவில்
கூடி ஒப்பாரிவைத்து, கண்ணீர் வடித்து
"நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஊர் செழிக்கணும் உன் அருளை வேண்டுகிறோம்"
"மழை தண்ணி இங்கே இல்லை
மாடு கன்று தவிக்குது
மழையே பொழிந்திடு மக்களை எல்லாம் காத்திடு "என்ற உணர்வோடு கண்ணீர் வடித்தது காண்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது மட்டுமல்ல; உணர்வுகலந்த
அந்த பக்தியை உலகுக்கு உணர்த்திய ஒரு நல்ல சம்பவமாக
பார்க்கிறோம்.

மழை பொழிய வேண்டுமென்று மனதார பிரார்த்தனை செய்யக் கூடிய கள்ளமில்லா இந்த கிராமத்து மக்களை உள்ளமெல்லாம் வாழ்த்த வேண்டும்.

உலக நன்மைக்காக ஒரு வழிபாடு எந்த வடிவத்திலும் செய்யலாம் என்பதற்கு இந்த ம .குன்னத்தூர் ஒரு உதாரணம்.

கிராமத்து மக்களில் உண்மையான பக்திக்கு நிச்சயமாக மழை பொழியும் என்று நம்புகிறோம்.

இந்த உணர்வுள்ள சமுதாயம் இருக்கின்ற வரை இயற்கை அன்னை நம்மை ஏமாற்ற மாட்டாள்.

நிச்சயமாக கருணை மழை பொழிந்து கால்நடைகளை , மனிதர்களை ,
மரம் செடி கொடிகளை காப்பாற்றுவாள் என்று நாம் ஒவ்வொருவரும் நம்புவோம் .

மழை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.

இன்றைய விழாவில் நாமும் கலந்துகொண்டு வழிபாடு செய்து உண்மை பக்தி வழிபாட்டில் ஒரு குரலாய் இன்று ஒலித்தது மனநிறைவைத் தருகிறது.

"மழை வேண்டும் மழை வேண்டும் தாயே மக்களை எல்லாம் காக்க வேண்டும் தாயே" என்ற பிரார்த்தனையோடு விடை பெற்று வந்தோம்.

இராம இரவிக்குமார் நிறுவனதலைவர் இந்து தமிழர் கட்சி

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்