செய்திகள் •
26 Oct 2018
பகுத்தறிவு தீட்டா?
இராம. இரவிக்குமார்
26 10 2018 மாலை 05.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டப் பூங்காவில் திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் உண்ணாநிலை மேற்கொள்ள உட்கார்ந்திருந்தார். நக்கீரன் நிருபர்கள் பேட்டி காண்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடைய அனுமதியோடு திருமதி சபரிமாலா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துச், "சாதிக் கொடுமையால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி என்ற சிறுமிக்காக நீங்கள் எடுக்கும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் . காவல்துறை அனுமதியோடு நீங்கள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறினேன். அது மட்டுமல்லாது, சுதேசி பெண்கள் அமைப்பினுடைய பொறுப்பாளர் திருமதி கலைச்செல்வி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். கொள்கை முரண்பாடுகள் சில இருந்தாலும் கூட சாதிக் கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட அந்த சிறுமி ராஜலட்சுமியைக் கொலைசெய்த கொலைகாரனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது என்றோம்.
ஈவேரா சமாதி முன்பு உண்ணாநிலை மேற்கொள்ள திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் முனைந்தபோது, அனுமதி மறுத்து, உண்ணாநிலை என்பதெல்லாம் பெரியாருக்கு ஏற்புடையது அல்ல, எனக் காரணம் சொல்லி வெளியே தள்ளாத குறையாய் வெளியேற்றிய பெண்ணுரிமைக்குப் போராடக் கூடிய சாதி ஒழிப்புக்காக அனுதினமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிட கழகத்தினர் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதனை அவர் முகநூலில் பதிவிட்டதும் பத்திரிக்கை நண்பரிடம் பகிர்ந்து கொண்டதும் பல கேள்விகளை எழுப்புகிறது?
1. ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமிக்கு நீதி வேண்டும் என உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கிய சபரிமாலா விற்கு நியாயமாக ஆதரவு தெரிவித்து வாழ்த்துகள் சொல்லியிருந்தால் திராவிட கழகத்தவர் பெண்ணிய பாதுகாவலர்கள் என்று சொல்லமுடியும். அதைச் செய்யாது உண்ணாநிலைப் போராட்டம் எல்லாம் ஈவெராவுக்கு உடன்பட்டது அல்ல என அவர்கள் வெளியேற்றியது என்ன வகை பகுத்தறிவு ?
2.சரி அப்படியானால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடிய திமுக அதிமுக வழிவந்த திராவிடர் கழகம் பெரியாருடைய கொள்கைக்க எதிரானவர்களா?
3.பெரியார் திடலை வணிக வளாகமாக மாற்றி காசு பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திகழும் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளே! பெரியார் திடலில் அறிவுக்கு சம்பந்தமில்லாத தோசை கதை பேசுவதற்கு, தோசையில் சாதி ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து அதில் பல அறிவார்ந்த பகுத்தறிவு பெருமக்களை அமரச்செய்து மதிமாறன் வார்த்தைகளில் உதிர்க்கும் ஒப்பற்ற தத்துவங்களை கேட்க செய்யும் உங்களுக்கு, ஒரு பெண்மணி பெண்ணிற்காக நீதிகேட்டு உண்ணாநிலை மேற்கொண்டால் என்ன குறைந்துபோகும் பெரியார் திடல்?
4 . திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து வெளியேற்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்களையும் வீரமணி அவர்களையும் கண்டித்து சமூக நீதிக்காக நாளெல்லாம் குரல் கொடுப்பதாக, சாதிவெறி தத்துவத்தை சொல்லும் - சாதி ஆராய்ச்சியாளர் அய்யா சுபவீ போன்றவர்கள், அம்மையார் அருள்மொழி போன்றவர்கள் மற்றும் பெண்ணுரிமைப் போராளிகள் யாவரும் திராவிட கழகத்தவர் செய்த செயலை ஆதரிக்கிறார்களா?
5.பெரியார் திடலில் நடக்கக்கூடிய எல்லா நிகழ்வுகளும் ஈவெராவுக்கு ஏற்புடையதா அப்படியானால் பெண்ணுரிமை சுதந்திரம் என்று பேசி தாலி அறுப்பு போராட்டம் நடத்திய உங்களுக்கு இந்த ஒற்றைப் பெண்மணி போராட்டத்தை உங்கள் திடலில் நடத்துவதற்கு தைரியம் இல்லாததற்கு காரணம் ஆளும் அரசை கண்டு பயமா?
6. ஈவேராவின் நினைவு நாளுக்கும் பிறந்தநாளுக்கும் மலர்வளையம் வைத்து வழிபாடு -
உங்கள் வார்த்தைகளில் வீரவணக்கம், ஒரு பிணத்திற்கு சிமெண்ட் கற்களால் ஆன ஒரு கட்டிடத்திற்கு வணக்க வழிபாடு செய்வது என்ன வகை பகுத்தறிவு தெரியவில்லை?
7. திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் ஈவேரா சமாதி அருகே அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து வெளியேற்றுவதற்கு காரணம் இவர்கள் பெண்கள் விரோதிகள் என்று காட்டுகிறது.
இவரை வெளியேற்றியது காரணம்
பகுத்தறிவு தீட்டா?
ஈவெரா சாமி குத்தம் ஆகிவிடுமோ ?
8. பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி என் அன்பு சகோதரர்களுக்கு ஈவேரா சமாதியிலிருந்து திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் வெளியேற்றப்பட்டது காரணம் குறித்து ஒரு பொது விவாதம் நடத்துவதற்கு தயாராக இருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்.
9.சோபியா என்ற பெண்ணுக்கு ஒரே நாளில் விளம்பரம் செய்து விவாதம் நடத்திய சகோதரர்களே திராவிடர் கழகத்தவர்கள் திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்களை வெளியேற்றியது சம்பந்தமாக விவாதம் நடத்துவார்கள் என்று மீண்டும் ஒருமுறை நம்புகிறேன்.
( திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த உடன் சோலை வீரமணி அவர்கள் )
நன்றி: விவேக் பாரதி
- நமது நிருபர் -
⬅ முந்தைய