மோசமான முதல்வர் கேரளவின் பினராயி விஜயன் : கூகுள் பதில்
கூகுல் தேடுதல் பொறியில் "மோசமான முதல்வர் யார்" என்று தேடும் போது கேரளவின் முதல்வர் பினராயி விஜயன் பெயர் முதல் இடத்தில் வருகிறது.
2016-ஆம் ஆண்டு அவர் முதல்வராகப் பதவியேற்றது உட்பட அவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு .
கூகுள் இணைய தேடுதலில் "bad chief minister" என்று இணைத்தில் தேடும்போது முதலாவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பெயர் வருகிறது.
மோசமான முதல்வர் பினராயி விஜயன்
இந்த கூகிள் தேடுதல் பொறியில் வரும் முடிவுகள் பற்றி கூகுள் நிறுவனம் எந்த பதிலும் கூறவில்லை . இப்போது "bad chief minister" என்று தேடினாலும் பினராயி விஜயன் பெயரே முதலில் தோன்றுகிறது.
இதனால் சமூக வலைத்தளங்களில் பினராயி விஜயனின் ஆதரவாளர்கள் கூகுள் நிறுவனத்தை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மத உணர்வு உள்ளவர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் .