செய்திகள் •
26 Oct 2018
பினாமி சொத்து வழக்குகளை விரைந்து முடிக்க தனி தீர்ப்பாயம். மோடி அரசு அதிரடி!!!
அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ அல்லது வரி காட்டாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளோ , தங்கள் பணத்தை அரசாங்கத்தின் கண்களில் இருந்து மறைத்து வைக்க கையாளும் ஒரு வழிதான் பினாமி சொத்து.
உதாரணத்திற்கு ஒரு அரசியல்வாதி ஊழல் பணத்தில் 5 கோடிக்கு ஒரு பங்களா வாங்கி அதை தனது வீட்டு வேலைக்காரர் பெயரில் பதிந்துகொள்வார் . (உங்களுக்கு சாதிக் பாட்ஸா நினைவுக்கு வரலாம்). இதனால் அரசாங்கத்தின் கண்களுக்கு அந்த அரசியல்வாதியின் 5 கோடி சொத்து தெரியாது.
இதுபோன்ற பினாமி சொத்து சம்பந்தமான வழக்குகளை விரைந்து முடிக்க மோடி அரசு கொண்டு வந்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கை தான் தனி தீர்ப்பாயம். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசாங்கம் எடுத்தது வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
பினாமி வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்ப்பாயமும், ஒரு மேல்முறையீட்டு ஆணையமும் அமைக்கப்படும். இதனால் பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்வதும், தவறு செய்தவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதைப்பதும் துரிதப்படுத்தப்படும்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய