Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 26 Oct 2018

பாரதத்திற்கு அடுத்த பத்து ஆண்டுகள் வலுவான அரசாங்கம் தேவை: ஜேம்ஸ்பாண்ட்

பாகிஸ்தானில் அவர்களுக்கு தெறியாமல் பல வருடங்கள் வாழ்ந்து ,தனது அடையாளங்களை மறைத்து உளவு பார்த்தவர் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள். இவரை இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கிறார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, பாரதத்திற்கு 2030 வரை ஒரு வலுவான அரசாங்கம் தேவை என்றார். வலுவில்லாத அரசாங்கம் இருந்தால் பதவியில் இருப்பவர்கள் நாட்டின் நலனை விட தனது சொந்த அரசியல் நலனிலேயே கவனம் செலுத்துவார்கள் என்றார். மோடி அரசாங்கம் தற்போது செய்துள்ள அணைத்து ராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்களில் கண்டிப்பாக தொழிநுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. அதை செயல்படுத்தவும் செய்கிறது என்றார். சீனாவின் அலிபாபா என்ற நிறுவனம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாங்கு ஆற்றி வருகிறது. ஆனால் அதேவேளையில் அந்த நிறுவனம் வளர்வதற்கு சீன அரசாங்கம் உதவி செய்தது என்றார். அதுபோல் இந்திய தனியார் நிறுவனங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்