Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 26 Oct 2018

திமுக தலைமையை கிண்டல் செய்கிறதா விகடன்?

ஆர்கே நகர் இரண்டு டஜன் கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பிணைத்தொகைகூட வாங்க முடியாமல் தோற்றது திமுக. தனது தந்தை போல் கட்சியை வழி நடத்துவரா ஸ்டாலின் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் "தேர்தலுக்கு தயாராகுங்கள்" என்ற வசனத்துடன் ஸ்டாப்களின் போருக்கு தயாராவது போல் விகடன் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அது அப்படியே மிகவும் பிரபலமாகி ஓடி 23ம் புலிகேசி திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் படத்தை ஒத்திருக்கிறது. கோட்டைக்கு வெளியே எதிரிநாட்டுப்படை இருக்கும்போது , படுக்கையறையில் பீதியுடன் போர்க்கவசமிட்டு அணிந்திருப்பார் வடிவேலு. அதே புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து ஸ்டாலின் இருப்பதுபோல் சித்தரித்திருக்கிறது விகடன்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்