செய்திகள் •
23 Oct 2018
சென்னை : பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆறாம் நாளாக குறைவு
சென்னை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆறு நாட்களாக குறைந்து வருகிறது.
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்க அனுமதி அளித்தது. அதை ஒட்டி விலையில் தினமும் மாறுதல் ஏற்பட்டது. சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது.
இதை ஒட்டி சமூக வலை தளங்களில் மத்திய அரசை குறை கூறி பலரும் விமர்சனம் செய்து வந்தனர். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு குறித்து அவர்கள் கண்டுக் கொள்ளாமல் சென்ற ஆட்சியின் விலையையும் இந்த ஆட்சியின் விலையையும் மட்டும் ஒப்பிட்டு பதிந்து வந்தனர்.
கடந்த 18 ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.88 ஆக குரைந்தது. அடுத்த நாளான 19 ஆம் தேதியும் அதே விலைக்கு விற்கப்பட்டது. பிறகு 20 ஆம் தேதி முதல் விலை மிக மிக சிறிய அளவில் குறைந்து வருகிறது. டீசல் விலையும் அதைப் போல குறைந்துக் கொண்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை தொடர்ந்து அதிகரித்த போது குறை கூறிய நெட்டிசன்கள் தற்போது விலை குறைப்பை கண்டுக் கொள்ளாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய