செய்திகள் •
02 Dec 2018
காணாமல் போகும் கல்மண்டபம் - கண்டுகொள்ளாத அறநிலையத்துறை
இந்துக்கள் சிறுபான்மை யாகி
பிற மதத்தவர்கள்
பெரும் பான்மையாக
ஆகிவிட்டால் என்னென்ன
கொடுமைகள் நடக்கும்
என்பதற்கு சாட்சியம் ......
மரக்காணம் தாலுகா புத்துப் பட்டு
அருள்மிகு மஞ்சினீஸ்வரர் கோவில் கட்டுட்பாட்டில் உள்ளது
இந்த பெருமாள் கோவில்.
சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியே உள்ள கூனிமேடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பழைய கோவில் அந்த பகுதியில் மாற்று மதத்தவர் அதிகரித்த காரணத்தினால் நாளடைவில் பராமரிப்பு இன்றி பூஜைகளே நடக்காமல் பாழடைந்து நிலைகுலைந்து போனது.
அந்த பகுதியின் அருகில் வசிக்கும் சில இந்துக்கள் அந்த நிலைகுலைந்த கோயில் துாண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி அருகில் தற்போது நீங்கள் இந்த புகைபடத்தில் பார்க்கும் கோவிலை அமைத்து அதில் பெருமாளை வைத்தனர்.
இதில் கவனிக்க பட வேண்டியது
இந்த கோவிலுக்கு கூனிமேட்டில் மட்டுமல்லாது ,
அதன் வெளியேயும் பல ஏக்கர் சொத்துக்கள் உள்ளன அத்தனையும் இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதி தான் இந்த மண்டபமும் குளமும் கோவிலில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள இது விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.
பெருமாள் உத்ஸவ மூர்த்தி பல்லக்கில் தூக்கி வரப்பட்டு இங்கிருக்கும் குளத்தில் நீராட செய்வடு அன்றைய வழக்கமாக இருந்து உள்ளது.
பெருமாளுக்கு உத்ஸவ, தீர்த்தவாரி மண்டபமாக திகழ்ந்த இம் மண்டபம் இன்று பல மாற்று மதத்தவரின் ஆக்கிரமிப்பிலும், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பிலும் உள்ளது.
இந்த மண்டபத்தின் இடத்தை பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த ரியல் எஸ்டேட் ஆசாமிகள் மண்டபத்தை உள்ளடக்கி சுவர் எழுப்பப்படுவதை அறிந்த ஊர் பொதுமக்கள் சிலர் அதை எதிர்ததால் இன்று இவை மிஞ்சியுள்ளது.
இந்த திருக்கோவில் சம்பந்தமாக
அற நிலையத்துறைக்கு தகவல் கொடுத்ததும் வந்து நிலத்தை அளந்து பார்த்து ரியல் எஸ்டேட் காரர்களை மிரட்டி பணம் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். என்பது அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு.
இது போல் அந்த பகுதியில் ஆயிரம் 800 வருடம் மேல் பழமை வாய்ந்த உடையார் கோவிலும் அதன் நிலங்களும் இன்று வரை ஆக்கிரமிப்பில் தான் உள்ளது.
அற நிலைய துறை சார்ந்தவர்கள் இன்று வரை கையாலாகாது வேடிக்கை பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.
இராம. இரவிக்குமார்
மாநில பொதுச் செயலாளர்
86430-81430
96553 -65696
இரா.இராஜேஷ்
76394 04665