Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 02 Dec 2018

வஜ்ரகிரி மலை வரலாறு

சென்னையில் இருந்து சுமார் 104கிமி தொலைவில் NH 45 தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரி மலை அமைந்து உள்ளது. இந்த மலை அண்ணாமலையை போல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இன்றளவும் இங்கு சித்தர்கள் வாழ்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மலையை கிரிவலம் வந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். இந்த மலையின் சிறப்பு சிவபெருமான் பசுபதீஸ்வரராக அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம். இதுவே அகத்திய முனிக்கு கிடைத்த முதல் சிவ பார்வதி திருமணக்கோல தரிசனம் ஆகும். இரண்டாம் மலை தொடரில் அமைந்துள்ள முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக தெற்கு திசை நோக்கி காட்சி கொடுக்கிறார். இவ்விடத்தின் பெருமையை, அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் பாடியுள்ளனர். வரலாற்றுப்பதிவுகள் இவ்விடத்தை சுமார் 4500 வருடம் பழமையானது என்று கூறுகின்றது. மலை அடிவாரத்தில் பெரும்பெயர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் சுமார் 1800 வருடம் பழமையானது என்று கூறுகின்றனர். இந்த எல்லையம்மனே வஜ்ரகிரி மலை தொடரை பாதுகாத்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கைலாசநாதர் திருக்கோவில். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில் 2000 வருடம் பழமையானது. இந்தகோவிலின் சிறப்பு இங்கே இருக்கும் தலவிருட்சம். இங்குள்ள கல்வெட்டுகள் மாவீரன் ராஜேந்திர சோழன் பெரும் போர் புரிந்து வெற்றி கண்ட பிறகு இந்த திருக்கோவிலில் திருப்பணி செய்துள்ளார் என்று கூறுகின்றது. இந்த மலை வழி பாதையில் அமைந்து உள்ள சஞ்சீவினி தீர்த்தம் பல விதமான வியாதிகளை தீர்க்கும் குணம் கொண்டது. பசுபதீஸ்வரர் இங்கே அகஸ்திய குறுமுனிக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்ததால் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். மூலிகைகள் நிறைந்த வஜ்ரகிரி என்ற மலை மீது இக்கோயில் உள்ளது. சுமார் 700 அடி உயரமுள்ள மலைமேல் படிக்கட்டுகள் உள்ளன. ஸ்ரீ ஔவையார் இத்தல ஈசனை வழிபட்டு உள்ளார். அவரின் பாத சுவடுகள் இங்கு காணப்படுகிறது. இங்கே சிவ சுப்ரமணியராக இருக்கும் முருக பெருமானை தரிசனம் செய்தால் சத்ரு தொல்லை நீங்கும். தொடர்ந்து கிரிவலம் மற்றும் வழிபாடு செய்து வந்தால் எதிரிகளால் வரும் தொல்லை அறவே நீங்கும். இந்த திருக்கோவில் திருச்செந்தூரிற்கு இணையானது மற்றும் குமர குறுதாச ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளாலும், அருணகிரி நாதராலும் போற்ற பெற்றுள்ளது. பெரும்பெயர்க்கண்டிகை எல்லையம்மனை தரிசனம் செய்தால் மக்கட்செல்வம் மற்றும் குடும்பத்தில் நன்மை உண்டாகும். இந்த பழமையான மலை அருணகிரிக்கு ஒப்பானது என்று சமீப காலத்தில் தான் ஒரு பெரியவரின் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. இதை அறிந்து அவர் கூறிய அறிவுரையின் படி இங்கே வஜ்ரகிரி மலை கிரிவலத்தை தொடங்கியுள்ளோம். மொத்தம் 14 Km நடக்க வேண்டும். பாரத தேசத்தில் எண்ணற்ற பழமையான கோயில்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ளகோயில்கள் எண்ணிக்கை பாரத நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் கோயில்களைவிட அதிகம் .குறிப்பாக தமிழகத்தில் உள்ளகோயிலின் மூர்த்திகள் சித்தர்கள் ,முனிவர்கள் ,தேவர்கள் போன்றோருக்கு காட்சிகொடுத்து அவர்களால் பூஜிக்கப்பட்டு கோவில்களாக உருமாறின. இது தவிர பண்டைய அரசர்களால் கட்டப்பட்டகோயில்கள கணக்கில்லாதவை .இத்தகைய புனிதமான சக்திவாய்ந்த பலகோயில்கள் இன்று கவனிப்பாரற்று பூஜைகளின்றி இருக்கின்றன அதில் பசுபதீஸ்வரர் கோவில், சிவ சுப்பிரமணியர், கைலாசநாதர் கோவிலும் உள்ளடக்கம். ஒரு காலத்தில் நன்கு வழிபடப்பட்ட பழைமையான, பவித்திரமான, சக்திவாய்ந்த இந்த கோயில்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளன...நித்ய பூஜைகள் இல்லாமல் இடிந்தும் கவனிப்பாரற்றும் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் . பழைய கோயில்கள் முன்பு இருந்த அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் உருவாக வேண்டும். இதனை கண்ணுறும் அன்பர்கள் தங்களுக்கு விருப்பமிருப்பின் தாங்களும் இப்பணியில் இணைந்துகொள்ள வசதியாக தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அகியவற்றை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு விவேகானந்தர் சங்கமம் அறக்கட்டளை, Hindu helpline, தமிழ் நாடு விஸ்வ ஹிந்து பரிஷத். ஆதி சைவ அடியார்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவ திரு மஹேந்திரன் (7010049163)

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்