Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Apr 2019

"இந்து விரோத கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்" : இந்து தமிழர் கட்சி

இந்து தமிழர் கட்சி சார்பில் திருப்பூர்  அய்யப்பன்  கோயில் முன்பு நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் அவர்களுடன் திருப்பூர் கமலநாதன் திரு செந்தில், கிருஷ்ணா மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டார்கள்.

தேர்தல் ஜனநாயகத்தின் எஜமானர்களே!

உங்களை பாதம் பணிந்து கீழ்க்கண்ட கோரிக்கையை முன்வைக்கிறோம்.

  1. ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற அனைவரும் 100% வாக்களிப்போம்.
  2. ஓட்டுக்கு பணம் வாங்காமல் , சாதி பார்த்து வாக்களிக்காமல்,
    நாட்டுக்கு நன்மை செய்யும் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.
  3. இந்து தெய்வங்களை ,
    இந்து நம்பிக்கைகளை,
    இந்து பண்பாட்டை,
    இந்து கலாச்சாரத்தை பாரம்பரியத்தை கேலி செய்து, கிண்டல் செய்து அரசியல் நடத்திவரும் இந்து-விரோத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.
  4. பொட்டு வைத்தால் கிண்டல், விபூதி பூசினால் அழித்தல், என்று அரசியல் நடத்தி வரும் இந்த சைவ விரோதிகள் சிவ விரோதிகள் தேர்தல் நேரத்தில் நானும் இந்து தான் என்று பொய் வேடம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த பொய் வேடதாரிகளுக்கு இந்துக்கள் நாம் வாக்களிக்க வேண்டாம் என உறுதி ஏற்போம்
  5. பாரம்பரியமாக இருந்து வந்த புனித சபரிமலையில் இந்து மத நம்பிக்கையில் தலையிட்டு ஐயப்ப பக்தர்களை அவமதித்து ஐயப்பன் கோயிலை சீரழித்த கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு_ ஐயப்பவிரோத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.
  6. தொழிலாளர்களை உறிஞ்சி, தொழிற்சாலைகளை மூடி போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி தொழிலை சீரழித்த தொழிலாளர் விரோதிகளுக்கு நாம் வாக்களிக்க வேண்டாம் என உறுதி ஏற்போம்.
  7. தமிழகத்தில் கூட்டணி. கேரளத்தில் எதிர்ப்பு! மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி மாற்றும் கோமாளி கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.
  8. இந்துக்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு வேண்டாம். இந்துக்கள் போடும் ஓட்டு மட்டும் வேண்டுமா? என இந்துக்களிடம் ஓட்டு கேட்டு வரும் இந்து விரோதிகளிடம் கேள்வி கேட்போம்.
  9. பாரத நாடு மீண்டும் வலிமையான ஒரு வல்லரசு காண விண்ணிலும் மண்ணிலும் சாதனை புரிந்திட நல்லவர் மீண்டும் பிரதமர் ஆகிட தேசபக்தி கூட்டணிக்கு வாக்களிப்போம்.
  10. தேசம் காத்திட, தெய்வீகம் காத்திட, தாய்நாடு காத்திட, தாய்மதம் காத்திட, தாய்மொழி காத்திட மண்ணின் மக்களை காத்திட, மதமாற்றம் தடுத்திட, தேசபக்த கூட்டணிக்கு வாக்களிப்போம். வாய்ப்பளிப்போம்.

இராம. இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்