‘‘பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிஜி தலைமையில் மீண்டும் பாஜ அரசு அமைய ஆதரவு அளிப்போம்’’
தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை ஆகியவற்றின் மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் 07.04.2019 நடந்தது.

தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் திரு. எஸ். வேதாந்தம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திரு. ஆர்ஆர். கோபால்ஜி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் திரு. எஸ். வேதாந்தம், பொதுச் செயலாளர் திரு. ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோர் நிருபர்களிடம் விளக்கினர். அப்போது கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தல், தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் மக்கள், தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆட்சிக்காலத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவதுடன், நாட்டின் மத ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், எதிரணியில் போட்டியிடும் கட்சிகள், மதவாதம் பேசி மக்களை திசை திருப்புகின்றன.
இந்த பிரச்சாரத்தை முறியடித்து, நாட்டின் வளர்ச்சிக்காக ஜாதி, மத பேதமின்றி செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான ஆட்சியே தொடர வேண்டும் என தீர்மானிக்கிறோம். எனவே, கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையும், விசுவ இந்து பரிஷத்–தமிழ்நாடு அமைப்பும்மத்தியில் மோடி தலைமையிலான அரசே மீண்டும் அமைய, பாஜ தலைமையிலான கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானித்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
#loksabhaelection2019
#PMModi
#SupportModi