செய்திகள் •
03 Dec 2018
பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா : கனிமொழிக்கு ராஜாவின் கிடுக்கிப் பிடி
சென்னை
கனிமொழியின் படேல் சிலை குறித்த கருத்துக்கு பாஜக தலைவர் எச் ராஜா பதில் கேள்வி கேட்டுள்ளார்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லப்பாய் படேலில் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகின் உயரமான சிலையான இந்த படேல் சிலை அமைதிச் சிலை என அழைக்கப்படுகிறது. இந்த சிலை செய்ய சுமார் 3000 கோடி செலவானதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் துணைவியார் மகளுமான கனிமொழி தனது டிவிட்டரில், “உயிரற்ற பட்டேல் சிலைக்கு மூன்றாயிரம் கோடி செலவு செய்த மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 350 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது ” என பதிந்திருந்தார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா தனது டிவிட்டரில், “படேல் சிலை உயிரற்ற சிலை என்றால், தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா?” என பதிலடி கொடுத்துள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1069406147067600897