உலகை ஆண்ட "இந்து தமிழன்" மாமன்னர் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர பக்தி பெருவிழா
இந்து தமிழர் கட்சியின்
இந்து தமிழர் முன்னணி- ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை ஏற்பாடு
20 .7 .2019 சனிக்கிழமை கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய உடையாளூர் ராஜராஜ சோழன் நினைவு கோயிலில் இந்து தமிழர் கட்சியின் இந்து தமிழர் முன்னணி மற்றும் ராஜராஜ சோழன் பக்தர்கள் பேரவை சார்பில் ஆடி மாத சதய நட்சத்திர ராஜராஜசோழன் பக்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை சன் சிவா தலைமை தாங்கினார்.
ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை அமைப்பாளர், திரு பாலு தஞ்சை மாவட்ட இந்து தமிழர் கட்சி அமைப்பாளர் திரு பால குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
வந்திருந்த நிர்வாகிகளை இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கடலூர் பரணிதரன் வரவேற்றார்.
பால் பன்னீர் மஞ்சள் சந்தனம் இளநீர் உட்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
மலர் தூவி வழிபாடு செய்யப்பட்டது
காங்கேயம் காளைகள் 2 ராஜராஜசோழன் நினைவு கோயிலில் வரவழைக்கப்பட்டு "நந்திதேவர் வழிபாடு" சிறப்பாக நடைபெற்றது.
திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது
மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு "உடையாளூர் ராஜராஜசோழன் திருக்கோயில் கட்டப்பட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு இராம. ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,
ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் ஒவ்வொரு மாதம் சதய நட்சத்திர தினத்தன்று உடையாளூரில் "ராஜராஜசோழன் பக்தி திருவிழா" நடைபெறும் மிகப்பெரிய அளவில் கோயில் கட்டப்பட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
ராஜராஜ சோழன் திருஉருவச்சிலை பெரிய அளவில் நிறுவப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசு இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நந்தி தேவர் வழிபாடு நடைபெற்றது.
நாடு முழுவதும் பசு பாதுகாப்பு மற்றும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் அரசின் சார்பில் நடைபெறும் சதய விழா அன்று வழங்கப்படும் "ராஜராஜ சோழன் விருது"
இந்த ஆண்டு "எழுத்து சித்தர் பாலகுமாரன்" அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசையும், விழா குழுவினரையும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்டப்பட வேண்டும்.
தேசிய நதிகள் இணைப்பு திட்டம் ஒருபுறம் இருந்தாலும்,
தமிழகத்தில் ஓடக்கூடிய தமிழக நதிகள் இணைப்பு குறித்து தமிழக அரசு ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும்.
அதற்கு "ராஜராஜ சோழன் தமிழக நதிகள் இணைப்பு திட்டம் "
என்று பெயர் சூட்ட வேண்டும்.
என்ற கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம்.
இந்த ஆண்டு நடைபெறும் ராஜராஜ சோழன் சதய விழாவை தேசியத் திருவிழாவாக கொண்டாடிட அறிவிப்பு செய்ய வேண்டும். என்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
விழா நிறைவில் ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை
பொறுப்பாளர் பொள்ளாச்சி சேகர்,மதுசூதனன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள். விழா இனிதே நடைபெற்றது.
இராம. இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவனதலைவர்
86430-81430