பழனியின் சண்முக நதியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட இந்து தமிழர் கட்சியினர்
பழனி புனிதமான சண்முக நதி கோடானுகோடி முருக பக்தர்கள் நீராட வேண்டிய புண்ணிய நதியானது காலச் சூழலில் கழிவுநீர் கலந்து வாத்துகளும் நீராடும் நிலையில் இருக்கிறது.
மிகுந்த வருத்தம் ஆன நிலையில் கடந்த வாரம் திங்கள்கிழமை மேன்மை தங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்திருந்தோம்.
உயர்திருஆட்சியர் அவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த நிலையில் இன்று 24 6 2019 திங்கள்கிழமை காலை பத்தரை மணியிலிருந்து ஒரு மணி வரை புனிதமான சண்முகநதியில்
ஒரு குறிப்பிட்ட பகுதியை சூழ்ந்து இருக்கக்கூடிய அமலைச் செடிகளை அகற்றக்கூடிய புண்ணிய காரியத்தில்
இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள்
மாநில குழு உறுப்பினர், பழனி,
திரு.மனோஜ் குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு. மருதுபாண்டி ஹரி,ரிஷி, காளி ஆனந்த் , நத்தம் குருமூர்த்தி , பாலா சென்னை ஸ்ரீராம் உள்ளிட்ட இந்து தமிழர் கட்சியை சார்ந்த 20 பேர் "சண்முக நதி தூய்மை காவலர்கள்" என்ற பெயரில் புனிதப் பணியை இன்று தொடங்கி இருக்கிறோம்.
எங்களால் இயன்ற காரியத்தை இன்று செய்ய முடிந்தது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் புனிதமான கங்கை தூய்மை படுத்தி, புனித பகுதியாக அறிவித்ததுபோல இந்து தமிழர்களின் தெய்வமான பழனி முருகன் தீர்த்தவாரி நடைபெற வேண்டும் .
சண்முக நதியில் படித்துறையில் கட்டப்பட்டு ஆரத்தி நிகழ்வுகள் நடக்க வேண்டும்.
கோவில்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லும் சுத்தமான புனித நதியாக சண்முகநதி மாறவேண்டும்.
ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் மின்சார வசதி செய்யப்பட வேண்டும் என்றும்
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சியின் வேண்டுகோள் வைக்கப்பட்டது.