Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 13 Jun 2019

ஆளில்லா ஹைபர் சோனிக் விமானம் இந்தியா புதிய சாதனை

இந்தியா முதல் முறையாக மிக அதிவேகமாக பறக்கும் ஆளில்லா ஹைபர் சோனிக் விமானத்தை வெற்றிகரமாக சோதனை சாதனை செய்துள்ளது.

முழுக்க இந்திய தொழில்நுட்பம்

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. 20 நிமிடங்கள் மட்டுமே பறக்க விடப்பட்ட அந்த விமானம் மணிக்கு 6 ஆயிரத்தி 174 கிலோ மீட்டர் வேகத்தில், ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது.

இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவீன் பட்நாயக் வாழ்த்து:

இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் பட்னாயக், இது ராணுவத்தின் வலிமையை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

https://twitter.com/Naveen_Odisha/status/1138732710334042118

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்