Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 05 Feb 2026

காளியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு: நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை பகுதியில் உள்ள காளியம்மன் உள்ளிட்ட கோவில்களின் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கில், கோவில் நிலத்தை பாதுகாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக பிப்ரவரி 19ஆம் தேதி வரை கலெக்டர், ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்