Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 23 Dec 2025

கேரளாவின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக மாநில கால்நடை துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்துள்ளார்.

பறவை காய்ச்சல் சந்தேகத்தின் அடிப்படையில் கோழிப்பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் நெடுமுடி, செருதனா, கருவட்டா, புன்னப்ரா தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் குருப்பந்தரா, கல்லுபுரயக்கல், வெல்லூர் பகுதிகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நிலைமையை மதிப்பீடு செய்து வரும் கால்நடை துறை அதிகாரிகள், தற்போது கோழி இறைச்சி மற்றும் முட்டை பயன்பாட்டுக்கு எந்தத் தடையும் இல்லை என தெரிவித்துள்ளனர். தேவையெனில் இழப்பீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்