Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Jan 2019

கோலோச்சும் கோவை! அடுத்த பாய்ச்சலுக்கு தயார்; உற்சாகத்தில் தொழில் துறை

"டைமண்ட்" அசோகன்

மத்திய, மாநில அரசுகளின் துணை ஏதுமின்றி, சுயமாக தொழிலில் முன்னேறிய நகரம் கோவை. இப்போது மத்திய, மாநில அரசு திட்டங்களின் துணையோடு, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள, கொடிசியா இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர், ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (டிபென்ஸ் காரிடார்), ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களுடன் இணைந்து தமிழக அரசு நடத்தி வரும் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கோவையில் வரவிருக்கும் புதிய தொழிற்பூங்காக்கள் ஆகியவை, கோவையின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவிருக்கின்றன.

தொழிற்பூங்காவுக்கு அடிக்கல்கோவையின் புறநகர் பகுதிகளான மோப்பிரிபாளையத்தில், 260 ஏக்கரிலும், கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கரிலும், கொடிசியாவின் தொழிற்பூங்காக்கள் தயாராகி வருகின்றன. நிலம் சமன்படுத்தப்பட்டு, சாலைகள், சாக்கடைகள், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு, கட்டுமானப்பணிக்கு தயாராக உள்ளது.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் பழனிசாமி இருவரும், தொழிற்பூங்காவின் கட்டுமான பணிகளை, வரும் பிப்., 6ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளனர்.'

இங்கு அமையவுள்ள, 600 புதிய நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் நிறுவனங்களுக்கு, 'ஜாப் ஒர்க்' செய்து தருவதற்காக, ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்களும், சுற்றுவட்டாரத்தில் உருவாகும்' என, 'கொடிசியா' நிர்வாகிகள் கூறுகின்றனர்.

டிபென்ஸ் காரிடார்'கொடிசியா' தொழிற்பூங்காவில்தான், ராணுவ தளவாட பொருட்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு உதவும், இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர் அமையவிருக்கிறது. அது செயல்பாட்டுக்கு வரும்போது, ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் அமையும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும்.

பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வதற்காக, பல்வேறு குறுந்தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கிளஸ்டர் துவங்கும் எண்ணத்தில் உள்ளன. இப்படி பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, ஏராளமான கிளஸ்டர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அத்துடன், கோவையை டிபென்ஸ் காரிடார் எனமத்திய அரசு அறிவித்துள்ளதால், ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தங்கள்கிளைகளை இங்கு அமைக்க இருக்கின்றன.'

இது கோவை இலகு ரக விமான வடிவமைப்பு தொழிற்சாலை..!, இச்சாதனைக்கு சொந்தகாரர் நம் பிரதமர் மோடி ஜீ..!
ஜெய் மோடி சர்க்கார்.! ஜெய் பாரத்..!

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்