Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 04 Mar 2026

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச முறைகேடுகளை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2024–2025 ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக 171 அரசு அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 129 அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனுடன், 199 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 681 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வருவாய் துறையைச் சேர்ந்த 92 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி துறையைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

மேலும், 2023–2024 ஆண்டில் 94 அரசு அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றிருந்த நிலையில், 2024–2025 ஆண்டில் 126 அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 32 பேர் அதிகமாகும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்