Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 04 Feb 2026

சமூக வலைதள வீடியோக்கள் பார்த்து பெட்ரோல் குண்டு தாக்குதல் – மதுரையில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ஜீவா நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து தாக்குதல் நடத்தியதாக பள்ளி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்விரோதம் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறார்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்ற கவலை மீண்டும் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்