Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 03 Feb 2026

மியான்மரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் : கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்யாப் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவிலும் உணரப்பட்டன. திடீரென ஏற்பட்ட அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல் வங்கதேசத்தில் இது இரண்டாவது முறையாக உணரப்பட்ட நிலநடுக்கமாகும். தற்போதுவரை உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்